2 வருஷத்துக்கு பிறகு இந்திய அணியில் இணையும் ஃபாஸ்ட் பவுலர்..? ஆஸ்திரேலிய தொடருக்கான உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 14, 2019, 12:59 PM IST
Highlights

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்ததாக இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. 
 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்ததாக இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. 

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் மட்டும் உள்ளது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இதுதான். எனவே உலக கோப்பை அணிக்கான பரிசீலனையில் உள்ள வீரர்களை சோதனை செய்ய இதுதான் கடைசி வாய்ப்பு.

உலக கோப்பைக்கு முன் ஐபிஎல்லும் நடக்க உள்ளது. எனவே தொடர்ந்து ஆடிவரும் சில வீரர்களுக்கு ஓய்வு தேவை. கேப்டன் விராட் கோலிக்கு நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. 

அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடரில் தொடக்க வீரரும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட உள்ளது. எனவே மாற்று தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரஹானே ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. உலக கோப்பை அணிக்கான பரிசீலனையில் ரஹானே உள்ளதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்திருந்தார். எனவே ரஹானே, ஆஸ்திரேலிய தொடரில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தமட்டில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய மூவரும் உலக கோப்பையில் ஆடுவது உறுதி. அதற்கு முந்தைய தொடர் இதுதான் என்பதால் மூவருமே அணியில் இடம்பெறுவர். ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளராக கலீல் அகமது ஏற்கனவே பரிசீலிக்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடரில் அவர் சரியாக பந்துவீசவில்லை. அவரது பவுலிங்கில் வேகம் இல்லை. அதுமட்டுமல்லாமல் எதிரணி வீரர்களை மிரட்டுமளவிற்கு வீசவில்லை. எனவே அவருக்கு பதிலாக ரஞ்சி தொடரிலும் அண்மைக்காலமாக சிறப்பாக வீசிவரும் ஜெய்தேவ் உனாத்கத் அணியில் எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அவர் நன்றாக வீசும் பட்சத்தில் உலக கோப்பை அணியின் ரிசர்வ் பவுலராக இடம்பெறுவார். 

ஒருவேளை ஜெய்தேவ் உனாத்கத் ஆஸ்திரேலிய தொடரில் அணியில் எடுக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் ஆடுவார். அவர் கடைசியாக 2016ம் ஆண்டு நவம்பரில் ஆடியதுதான் கடைசி என்பது குறிப்பிடத்தக்கது. 

குல்தீப், சாஹல் ஆகிய இருவரும் பிரைம் ஸ்பின்னர்கள். ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் பார்ட் டைம் ஸ்பின்னராக இருப்பார் என்பதால் ஜடேஜா இடம்பெற வாய்ப்பில்லை. விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்படும். 

ஆஸ்திரேலிய தொடருக்கான உத்தேச இந்திய அணி:

தவான், கோலி(கேப்டன்), ரஹானே, ராகுல், ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல், விஜய் சங்கர். 
 

click me!