தம்பி வாய்ப்பை வீணடிச்சுட்டாரு.. நீங்க கொஞ்சம் உட்காருங்க.. ரொம்ப நாளா போராடுற அவர எடுத்துக்குறோம்!! உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Oct 29, 2018, 10:43 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நீண்ட நாட்களாக அணியில் சேர்க்கப்படாமல் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் மனீஷ் பாண்டேவிற்கு அணியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 
 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நீண்ட நாட்களாக அணியில் சேர்க்கப்படாமல் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் மனீஷ் பாண்டேவிற்கு அணியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடக்க உள்ளது. முதல் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-1 என தொடர் சமநிலை அடைந்துள்ளது. எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். 

இன்றைய போட்டியில் வென்றால்தான் தொடரை வெல்லும் வாய்ப்பில் இந்திய அணி நீடிக்க முடியும். எனவே இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும். ராயுடு, பண்ட் மூலம் மிடில் ஆர்டர் பிரச்னை தீரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது போட்டியில் ராயுடு, பண்ட், தோனி சோபிக்கவில்லை. மிடில் ஆர்டரின் சொதப்பலால் இந்திய அணி தோல்வியை தழுவியது. 

கடந்த போட்டியில் 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. ஆல்ரவுண்டர் ஒருவர் கூட இல்லாததும் கடைசி நேரத்தில் பேட்டிங்கில் ஒத்துழைப்பு கொடுக்க வீரர் இல்லாததால்தான் இந்திய அணியால் இலக்கை விரட்ட முடியவில்லை. எனவே இந்த போட்டியில் கேதர் ஜாதவ் ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

அதேபோல முதல் போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத ரிஷப் பண்ட், அடுத்த இரண்டு போட்டிகளிலும் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். சூழலுக்கு ஏற்றவாறு ஆடாமல் அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுக்கிறார் ரிஷப் பண்ட். அது அணிக்கு பாதிப்பாக அமைந்துவிடும் என்பதை அறிந்து சூழலுக்கு ஏற்ப ஆட ரிஷப் முனைய வேண்டும். ரிஷப் பண்ட் இரண்டு வாய்ப்பையும் தவறவிட்டதால், மனீஷ் பாண்டேவிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும் நீண்ட காலமாக ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார் மனீஷ் பாண்டே. எனவே அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மற்ற வீரர்கள் அப்படியே தொடருவதற்கான வாய்ப்புதான் உள்ளது. கலீலுக்கு பதிலாக கேதர் ஜாதவும் ரிஷப்பிற்கு பதிலாக மனீஷ் பாண்டேவும் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

நான்காவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, மனீஷ் பாண்டே, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப், சாஹல், பும்ரா.
 

click me!