பயமா..? எங்களுக்கா..? வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு கோலி பதிலடி

By karthikeyan VFirst Published Oct 28, 2018, 4:46 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணி கொடுத்த நெருக்கடியால்தான் இந்திய அணி புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவை அணியில் சேர்த்துள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறியதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். 
 

வெஸ்ட் இண்டீஸ் அணி கொடுத்த நெருக்கடியால்தான் இந்திய அணி புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவை அணியில் சேர்த்துள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறியதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டிருந்தனர். அந்த இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 300 ரன்களை கடந்தது. 

இதையடுத்து எஞ்சிய மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். இருவரும் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா, வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் கொடுத்த நெருக்கடியால் இந்திய அணி புவனேஷ்வர் குமாரையும் பும்ராவையும் அணியில் சேர்த்துவிட்டதாக கருத்து தெரிவித்தார். 

அதற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய கோலி, உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக அனைத்து வீரர்களும் பரஸ்பரம் அனைவருடனும் ஆடினால்தான் வீரர்களுக்குள் புரிதல் இருக்கும் என்பதற்காக சுழற்சி முறையில் வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதனால்தான் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணி முதலில் அறிவிக்கப்பட்டது. அப்போதே எஞ்சிய மூன்று போட்டிகளுக்கு புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் அணியில் சேர்க்கப்படுவதென்று முடிவு செய்யப்பட்டதுதான் என்று கோலி தெரிவித்தார்.

அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணி முதலிரண்டு போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் எடுத்ததால் புவனேஷும் பும்ராவும் சேர்க்கப்படவில்லை. அது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுதான் என்பதுதான் வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு கோலியின் பதிலடி. 
 

click me!