நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Jan 22, 2019, 3:07 PM IST
Highlights

4ம் வரிசையில் நிலவிய சிக்கலை தீர்க்க வந்தவராக பார்க்கப்பட்ட ராயுடு, ஆஸ்திரேலியாவில் சொதப்பியதை அடுத்து அந்த இடத்தில் தோனியை இறக்கவேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் தோனிக்கு 5ம் வரிசை தான் சிறந்த இடம் என்று கேப்டன் கோலி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, அதே உத்வேகத்துடன் நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி வலுவாக உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய தொடரில் தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேப்பியரில் நாளை நடக்கிறது. கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆகிய 2 அணிகளுமே வலுவாக உள்ளதால், இந்த தொடர் மிகவும் கடினமான தொடராகவே இருக்கும். 

இந்திய அணி வலுவாக இருந்தாலும் மிடில் ஆர்டர் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. 4ம் வரிசையில் நிலவிய சிக்கலை தீர்க்க வந்தவராக பார்க்கப்பட்ட ராயுடு, ஆஸ்திரேலியாவில் சொதப்பியதை அடுத்து அந்த இடத்தில் தோனியை இறக்கவேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் தோனிக்கு 5ம் வரிசை தான் சிறந்த இடம் என்று கேப்டன் கோலி கூறியுள்ளார். எனவே 4ம் வரிசையில் இளம் வீரர் ஷுப்மன் கில்லை இறக்கிவிட்டு முயற்சி செய்து பார்க்கப்பட வாய்ப்புள்ளது. 

எனவே தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு ஷுப்மன் கில்லை அணியில் சேர்த்து, நான்காம் வரிசையில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் ஆல்ரவுண்டராக விஜய் சங்கரும், குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, தவான், விராட் கோலி(கேப்டன்), ஷுப்மன் கில், தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், சாஹல், ஷமி.

click me!