பெர்த் டெஸ்ட்.. அவங்க 4 பேருக்கும் வாய்ப்பு.. ரோஹித் இடத்தில் விஹாரி!! உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Dec 13, 2018, 12:53 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நாளை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் இடத்தில் ஹனுமா விஹாரி களமிறங்க உள்ளார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நாளை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் இடத்தில் ஹனுமா விஹாரி களமிறங்க உள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்துவரும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நாளை தொடங்குகிறது. 

இரண்டாவது போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணி இன்று காலை அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, உமேஷ் யாதவ் மற்றும் பும்ரா ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அஷ்வின் காயம் காரணமாக நீக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஹனுமா விஹாரியும் அணியில் உள்ளார். 

இரண்டாவது போட்டி நடக்க உள்ள பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் 5 வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் நான்கு பேர் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. 

7 பேட்ஸ்மேன்கள் மற்றும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது. தொடக்க வீரர்களாக வழக்கம்போல முரளி விஜய், ராகுல் ஆகியோர் களமிறங்குவர். அதற்கு பிறகு மூன்றாம் வரிசையில் புஜாரா, நான்காமிடத்தில் கோலி, ஐந்தாம் வரிசையில் ரஹானே இறங்குவர். முதல் போட்டியில் ரோஹித் சர்மா இறங்கிய 6ம் வரிசையில் ஹனுமா விஹாரியும் 7ம் இடத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் இறங்குவர். 

வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் குமாரை தவிர மற்ற நான்கு பேரும் ஆடும் லெவனில் இடம்பெறலாம். பும்ரா, இஷாந்த், ஷமி, உமேஷ் ஆகிய நால்வரும் இடம்பெற வாய்ப்புள்ளது. ஏனெனில் புவனேஷ்வர் குமாரை விட நல்ல வேகமாக வீசக்கூடியவர் உமேஷ் யாதவ். இவரது பந்து நன்றாக பவுன்ஸும் ஆகும் என்பதால் அவர்தான் அணியில் இடம்பெறுவார். தொழில்முறை ஸ்பின் பவுலர் அணியில் இல்லையென்றாலும் ஸ்பின் பவுலிங்கே எடுபடாத பெர்த் ஆடுகளத்தில் ஹனுமா விஹாரியும் முரளி விஜயுமே போதும் என இந்திய அணி நினைக்கலாம். அதனால் 7 பேட்ஸ்மேன்கள் மற்றும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்குவர். 

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), முரளி விஜய், கேஎல் ராகுல், புஜாரா, ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா.
 

click me!