சிட்னிக்கும் இந்திய அணிக்கும் கொஞ்சம் கூட ராசியே இல்ல!!

By karthikeyan VFirst Published Jan 7, 2019, 2:20 PM IST
Highlights

இந்திய அணிக்கும் சிட்னிக்கும் கொஞ்சம் கூட ராசியே கிடையாது. 2004ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி தவறவிட்டதை கோலி படையும் தவறவிட்டது. 
 

இந்திய அணிக்கும் சிட்னிக்கும் கொஞ்சம் கூட ராசியே கிடையாது. 2004ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி தவறவிட்டதை கோலி படையும் தவறவிட்டது. 

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்திய அணியின் நீண்டகால கனவை நனவாக்கியுள்ளது. 2004ல் இந்திய அணியின் இந்த கனவு நிறைவேறியிருக்க வேண்டியது. ஆனால் அப்போது கங்குலி தலைமையிலான இந்திய அணி அந்த வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது. ஆனால் அந்த குறையை கோலி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது. 

அடிலெய்டு, மெல்போர்ன் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணி, சிட்னி டெஸ்டிலும் வெற்றி பெற்றிருக்கும். மெல்போர்னில் நடந்த கடந்த போட்டியில் வென்றதன் மூலம் 1981ம் ஆண்டுக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து மெல்போர்னில் டெஸ்ட் போட்டியை வென்ற சாதனையை படைத்தது கோலி தலைமையிலான இந்திய அணி. 

அதேபோன்றதொரு சாதனையை சிட்னி டெஸ்டிலும் இந்திய அணி நிகழ்த்தியிருக்கும். ஆனால் மழை குறுக்கிட்டதால் சிட்னி டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி பறிபோனது. 1978ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் வென்றதே இல்லை. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அருமையான வாய்ப்பு இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது. 

2004ம் ஆண்டில் கங்குலி தலைமையிலான இந்திய அணி சிட்னியில் நடந்த டெஸ்டில் வெற்றியை நெருங்கியது. ஆனால் கடைசி நாள் ஆட்டத்தில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் களத்தில் நிலைத்து நின்று பேட்டிங் ஆடி தோல்வியை தவிர்த்தார். அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் சச்சினின் இரட்டை சதம் மற்றும் லட்சுமணனின் சதத்தால் இந்திய அணி 705 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்துக்கொண்டது. நிலைத்து ஆடி போட்டியை டிரா செய்தது. 

அந்த சிட்னி போட்டியிலும் இந்திய அணி வெற்றிக்கு அருகில் சென்று வெற்றி பெற முடியாமல் போனது. இப்போது நடந்த போட்டியிலும் வெற்றி வாய்ப்பு அருமையாக இருந்தும் வெற்றி பெற முடியாமல் போனது. 2004ல் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக ஆடி டிரா செய்தனர். இந்த போட்டியில் மழை குறுக்கிட்டு இந்தியாவின் வெற்றியை பறித்துவிட்டது. ஆக மொத்தத்தில் இந்திய அணிக்கும் சிட்னிக்கும் ராசியே இல்லை. 
 

click me!