கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே!! 40 வருஷ சாதனை ஒன்றை தவறவிட்ட கோலி படை

By karthikeyan VFirst Published Jan 7, 2019, 12:03 PM IST
Highlights

அடிலெய்டு, மெல்போர்ன் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணி, சிட்னி டெஸ்டிலும் வெற்றி பெற்றிருக்கும். மழை குறுக்கிட்டதால் சிட்னி டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி பறிபோனது. 

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி, 40 ஆண்டுகால சாதனை ஒன்றை துரதிர்ஷ்டத்தால் நழுவவிட்டது. 

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்திய அணியின் நீண்டகால கனவை நனவாக்கியுள்ளது. 2004ல் இந்திய அணியின் இந்த கனவு நிறைவேறியிருக்க வேண்டியது. ஆனால் அப்போது கங்குலி தலைமையிலான இந்திய அணி அந்த வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது. ஆனால் அந்த குறையை கோலி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது. 

அடிலெய்டு, மெல்போர்ன் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணி, சிட்னி டெஸ்டிலும் வெற்றி பெற்றிருக்கும். மழை குறுக்கிட்டதால் சிட்னி டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி பறிபோனது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அருமையான வாய்ப்பு இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது. 

மெல்போர்னில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வென்றதன்மூலம் 37 ஆண்டுகளுக்கு பிறகு மெல்போர்னில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது என்ற சாதனையை நிகழ்த்தியது. அதேபோல சிட்னியில் கடைசியாக இந்திய அணி 1978ல் தான் வென்றது. அதன்பிறகு 40 ஆண்டுகளாக சிட்னி டெஸ்டில் இந்திய அணி வென்றதில்லை. அந்த ஏக்கம் இந்த முறை தீர்ந்திருக்க வேண்டியது. ஆனால் இந்த முறையும் மழையால் அது முடியாமல் போனது. 2004ம் ஆண்டும் சிட்னியில் நடந்த போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை சென்ற இந்திய அணியால் வெற்றி பெறமுடியாமல் போனது. இந்த போட்டியில் வென்றிருந்தால் 40 ஆண்டுக்கு பிறகு சிட்னி டெஸ்டில் வென்ற சாதனையையும் கோலி படை படைத்திருக்கும். ஆனால் அது பறிபோனது.
 

click me!