டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ்‍-பிரக்ஞானந்தா பலப்பரீட்சை; வெற்றிக்கனியை பறித்தது யார்?

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக செஸ் சாம்பியன் குகேஷிம், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் மோதினார்கள். 
 


பிரக்ஞானந்தா-குகேஷ் மோதல் 

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டித் தொடர் நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது மொத்தம் 13 சுற்றுகளாக நடைபெறும் இந்த தொடரில் உலகின் முன்ணி செஸ் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைசாலி உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Latest Videos

இந்நிலையில், 8வது சுற்றில் உலக செஸ் சாம்பியன் குகேஷும், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் பலப்பரீட்சை நடத்தினார்கள். பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும், குகேஷ் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். திறமைவாய்ந்த இருவரும் சாதுர்யமாக காய்களை நகர்த்தியதால் போட்டி நீயா? நானா? என பரபரப்பாக சென்றது. 33வது காய் நகர்த்தாலில் இருவரும் போட்டியை டிரா செய்ய ஒத்துக் கொண்டனர். இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் கிடைத்தன.

மற்ற இந்திய வீரர்கள் எப்படி?

மற்ற இந்திய வீரர்களை பொறுத்தவரை எமன் மென்டோன்கா, ஹரி கிருஷ்ணா, அர்ஜூன் எரிகேசி ஆகியோர் தாங்கள் விளையாடிய போட்டிகளை டிரா செய்தனர். இதேபோல் வைஷாலி 8-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த ஆர்தர் பஜ்பர்சுடன் மோதிய ஆட்டத்தை டிரா செய்தார்.8வது சுற்றுகள் முடிவில் குகேஷ்,பிரக்ஞானந்தா என இரண்டு பேரும் தலா 5.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கின்றனர். 

உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ்வும் 5.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். சுலோவெனியாவை சேர்ந்த எபடோசிவ் விளாமிர் 5 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார். இந்திய வீரர்கள் வைசாலி 4.5 புள்ளிகள், ஹரி கிருஷ்ணா 4 புள்ளிகள், மன் மென்டோன்கா 2.5 புள்ளிகள், எரிகேசி 2 புள்ளிகள் பெற்றிருக்கின்றனர். 

உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த தொடர் 

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஏற்கெனவே 7-வது சுற்றில் ஹரி கிருஷ்ணாவிடம் அபார வெற்றி பெற்றிருந்தார். உலக செஸ் சாம்பியனான அவரும், பிரக்ஞானந்தாவும் மோதி வருவதால் இந்த போட்டித் தொடர் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

click me!