எஞ்சிய 5 பந்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த பும்ரா!! டி.எல்.எஸ் முறைப்படி இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயம்

By karthikeyan VFirst Published Nov 21, 2018, 4:04 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி 17 ஓவருக்கு 174 ரன்கள் என்ற இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளது.
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி 17 ஓவருக்கு 174 ரன்கள் என்ற இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங் தேர்வு செய்ததால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஷார்ட் மற்றும் அந்த அணிய்ன் கேப்டன் ஃபின்ச் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே தொடக்கத்தில் பும்ரா மற்றும் புவனேஷின் பந்தில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறினர். பும்ரா வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில் ஃபின்ச் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோலி தவறவிட்டார். களத்தில் பெரும்பாலும் தவறிழைக்காத கோலி, அந்த கேட்ச்சை தவறவிட்டு ஆச்சரியப்படுத்தினார்.

இதையடுத்து 5வது ஓவரை வீசினார் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது. அதுதான் அவர் வீசிய முதல் ஓவர். தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஷார்ட்டை வீழ்த்தினார் கலீல் அகமது. இதையடுத்து களத்திற்கு வந்த கிறிஸ் லின் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசினார். தொடக்கம் முதலே திணறினாலும் தட்டுத்தடுமாறி ஒருசில பவுண்டரிகளை அடித்து ஆடிய ஃபின்ச், குல்தீப்பின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 27 ரன்களில் ஃபின்ச்சும் ஆட்டமிழக்க லின்னுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார்.

சிக்ஸர்களாக விளாசிவந்த லின்னையும் வெளியேற்றினார் குல்தீப். 37 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப்பின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் லின். இதையடுத்து அவர் விட்டுச்சென்ற வேலையை மேக்ஸ்வெல் தொடர்ந்தார்.மேக்ஸ்வெல்  4 சிக்ஸர்களுடன் 23 பந்துகளில் 46 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்த நிலையில் 16.1 ஓவருக்கு ஆஸ்திரேலிய அணி 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியதும் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

5 பந்துகள் மட்டுமே எஞ்சிய நிலையில், அந்த ஓவரை பும்ரா தொடர்ந்தார். மீண்டும் களத்திற்கு வந்ததும் முதல் பந்திலேயே மேக்ஸ்வெல்லை வீழ்த்தினார் பும்ரா. அதன்பிறகு எஞ்சிய 4 பந்துகளில் ஒரு பவுண்டரியைக்கூட விட்டுக்கொடுக்காமல் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து 17 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவருக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரோஹித்தும் தவானும் ஆடிவருகின்றனர்.
 

click me!