புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனில் தமிழ் தலைவாஸ் அணியானது புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் ஆகிய இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளைத் தொடர்ந்து தபாங் டெல்லி, ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
India vs England 1st Test Day 1: யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்பான் சதம் – இந்தியா 336 ரன்கள் குவிப்பு!
தெலுகு டைட்டன்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் 12ஆவது இடம் பிடித்து எலிமினேட்டாகியுள்ளது. இந்த அணிகள் தவிர, பெங்கால் வாரியர்ஸ், பெங்களுரூ புல்ஸ், தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் உள்ளன. இனி வரும் போட்டிகளில் இந்த அணிகள் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற சில அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் அணிகளில் மாற்றம் ஏற்படும்.
பேருக்கு மட்டும் எடுத்து வச்ச டீம் இந்தியா, சர்ஃப்ராஸ் கானை ஏன் சேர்க்கவில்லை?
ஒரு அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்க வேண்டும். தற்போது புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணியானது 40 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ், யு மும்பா, பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகிய 4 அணிகளால் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோக வாய்ப்பு உள்ளது.
சிக்ஸர் அடித்து சதம் – சொந்த மண்ணில் முதல் சதம் விளாசி யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
இந்த அணிகள் 40 முதல் 50 புள்ளிகள் வரையில் பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடங்கள் முதல் 10 ஆவது இடங்கள் வரையில் உள்ளன. எல்லா அணிகளுக்கும் இன்னும் 5 முதல் 6 லீக் போட்டிகள் உள்ளன. இந்த 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் 25 புள்ளிகள் பெற்று மொத்தமாக 65 புள்ளிகளுடன் ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் இருக்கிறது.
தற்போது புள்ளிப்பட்டியலில் 7ஆவது முதல் 10ஆவது இடங்கள் வரை உள்ள அணிகள் ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.