புரோ கபடி லீக்கின் 10ஆவது சீசனின் இன்று நடக்கும் முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
புரோ கபடி லீக்கின் 10ஆவது சீசன் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்றுள்ளன. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 38-32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
India vs Australia 5th T20I: இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!
மற்றொரு போட்டியில் யு மும்பா மற்றும் யுபி யோதாஸ் அணிகள் மோதின. இதில், யு மும்பா 34 – 31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. 2ஆம் நாளான இன்று 2 போட்டிகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக சாகர் ரதீ இருக்கிறார். அஷன் குமார் பயிற்சியாளராக இருக்கிறார். தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் மேக்னம் ஸ்போர்ட்ஸ் பிரைவேட். லிமிடெட் நிறுவனம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்:
அஜிங்க்யா பவார், சாகர், ஹிமான்ஷு, எம் அபிஷேக், சாஹில், மோஹித், ஆஷிஷ், நரேந்தர், ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷு சிங், செல்வமணி கே, ரித்திக், மசன்முத்து லக்ஷ்ணன், சதீஷ் கானன், அமீர் ஹூசைன் பஸ்தாமி, முகமதுரஜா கபௌத்ரஹங்கி.
தபாங் டெல்லி அணி வீரர்கள்:
நவீன் குமார், விஜய், மன்ஜீத், ஆஷிஷ் நர்வால், சூரஜ் பன்வார், விஷால் பரத்வாஜ், சுனில், அஷு மாலிக், மீடூ, நிதின் சண்டல், பாலாசாகேப் ஷாஹாஜி ஜாதவ், ஆகாஷ் பிரஷர், விக்ராந்த், பெலிக்ஸ் லி, யுவராஜ் பாண்டேயா, மோஹித்.
இதைத் தொடர்ந்து நடக்கும் 2ஆவது போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் பெங்களூரு காளைகள் அணிகள் மோதுகின்றன.