
டி20 கிரிக்கெட் முறையானது வீரர்களின் செயல்பாட்டில் நம்பமுடியாத அளவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற 'சச்சின்: ஏ பில்லியன் டிரீம்ஸ்' என்ற தனது வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் சிறப்பு நிகழ்ச்சியின்போது, அந்தப் போட்டி குறித்து சச்சின் கூறியது:
2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை தற்போது அதே வீரர்களைக் கொண்டு விளையாடினால், அதன் முடிவு வேறு மாதிரியாக இருக்கும்.
இந்திய வீரர்கள் அந்த ஆட்டத்தை வேறு விதமாக கையாண்டிருப்பார்கள். ஏனெனில், பிற்காலத்தில் கொண்டு வரப்பட்ட டி20 கிரிக்கெட் முறையானது வீரர்களின் செயல்பாட்டில் நம்பமுடியாத அளவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அந்த காலகட்டத்தில் 359 ஓட்டங்கள் என்பது மிகப்பெரிய இலக்காக இருந்தது.
இப்போதும் அப்படி இருந்தாலும் 325, 340 இலக்குகளைக் கூட எட்டியுள்ளோம்.
போட்டியின் முறை, விதிகள், சூழ்நிலைகள் என அனைத்துமே மாறியுள்ளதே அதற்குக் காரணம். டி20 போட்டியின் காரணமாக வீரர்களின் மன நிலை உள்ளிட்ட அனைத்தும் மாறியுள்ளதாக கருதுகிறேன்” என்று சச்சின் கூறினார்.
2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது இந்தியா. அதில், ஆஸ்திரேலியா 359 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியாவோ 234 ஓட்டங்களுக்கு சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.