இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்ட திருத்தங்களை செய்ய முன்னாள் நீதிபதி நாகேஸ்வர ராவை நியமித்தது உச்சநீதிமன்றம்

By karthikeyan VFirst Published Sep 22, 2022, 6:28 PM IST
Highlights

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள முன்னாள் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவை நியமித்தது உச்சநீதிமன்றம்.
 

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரியாக முன்னாள் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவை நியமித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவை நியமித்துள்ளது உச்சநீதிமன்றம். 

இதையும் படிங்க - இந்திய அணி இவரை ஏன் டீம்ல வச்சுருக்காங்கனே தெரியல - மேத்யூ ஹைடன்

உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூத் தலைமையிலான அமர்வு, ஒலிம்பிக்கில் இந்தியா எதிர்காலத்தில் பிரகாசிக்கும் வகையில் வளர்ச்சி பணிகளை எல்.நாகேஸ்வர ராவ் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொறுப்பு தலைவராக இருந்த அனில் கன்னாவின் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துவிட்ட நிலையில், அனில் கன்னா அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே டிசம்பர் 12ம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பொறுப்பு மற்றும் ஒலிம்பிக் சங்க சட்ட திருத்தங்களுக்கான ரோட்மேப் ஆகியவற்றை எல்.நாகேஸ்வர ராவ் தயார் செய்து கொடுக்க வேண்டும். 

இதையும் படிங்க - பென் ஸ்டோக்ஸ் வேற லெவல் ஆல்ரவுண்டர்ங்க.. பாண்டியா அந்தளவுக்குலாம் ஒர்த் இல்ல..! முன்னாள் வீரர் அதிரடி

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, துணை தலைவர் ஆண்டில் சமரிவாலா ஆகியோர் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 

click me!