அந்த பையனா இது..? தம்பி முன்னாடி மாதிரிலாம் இல்லயே.. ரொம்ப தேறிட்டாரு!! கவாஸ்கரின் பாராட்டை பெற்ற வீரர்

By karthikeyan VFirst Published Sep 9, 2018, 6:07 PM IST
Highlights

ஜடேஜா முன்புபோல் இல்லாமல் தற்போது நிதானமாகவும் தெளிவாகவும் ஆடுவதாக சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். 
 

ஜடேஜா முன்புபோல் இல்லாமல் தற்போது நிதானமாகவும் தெளிவாகவும் ஆடுவதாக சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 332 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தவான் 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ராகுல் மற்றும் புஜாரா ஆகிய இருவருமே தலா 37 ரன்கள் சேர்த்து அவுட்டாகினர். விராட் கோலி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். மூவருமே சிறப்பாக தொடங்கி அதை தொடராமல் பாதியிலேயே அவுட்டாகினர். இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தை விஹாரியும் ஜடேஜாவும் தொடர்ந்தனர். இன்றும் சிறப்பாகவே ஆடிவருகின்றனர். ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் ஆகிய நால்வரும் மாறி மாறி பந்து வீசிவருகின்றனர். எனினும் விஹாரியும் ஜடேஜாவும் இவர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு தெளிவாக ஆடினர்.

அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்த ஹனுமா விஹாரி 56 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு ஜடேஜாவுடன் இஷாந்த் சர்மா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு ஆடிவரும் ஜடேஜா 94 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

உணவு இடைவேளையின்போது வர்ணனையாளர்கள் கலந்துரையாடலின்போது, ஜடேஜாவின் பேட்டிங்கை முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் பாராட்டி பேசினார். அப்போது, ஜடேஜா முன்புபோல் இல்லை. இப்போது சூழலை புரிந்துகொண்டு பேட்டிங் செய்கிறார். முன்பெல்லாம் அடித்து ஆட நினைத்து விக்கெட்டை பறிகொடுத்து விடுவார். ஆனால் இப்போது சூழலை புரிந்துகொண்டு நிதானமாகவும் தெளிவாகவும் ஆடுகிறார் என பாராட்டி பேசினார். 
 

click me!