எப்படியும் சோலி முடியப்போகுது.. அதற்குள் இதையாவது பண்ணுங்க!! கடுப்பேத்தும் காம்பீர்

By karthikeyan VFirst Published Sep 9, 2018, 4:49 PM IST
Highlights

இங்கிலாந்தைவிட அதிக ரன்கள் பின் தங்கிவிடாமல் விஹாரியும் ஜடேஜாவும் பொறுப்புடன் ஆடி, ரன்களை சேர்க்க வேண்டும் என காம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
 

இங்கிலாந்தைவிட அதிக ரன்கள் பின் தங்கிவிடாமல் விஹாரியும் ஜடேஜாவும் பொறுப்புடன் ஆடி, ரன்களை சேர்க்க வேண்டும் என காம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றநிலையில், கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியில் ராகுல் மற்றும் புஜாரா ஆகிய இருவருமே தலா 37 ரன்கள் சேர்த்து அவுட்டாகினர். விராட் கோலி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். மூவருமே சிறப்பாக தொடங்கி அதை தொடராமல் பாதியிலேயே அவுட்டாகினர். இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரியும் ரவீந்திர ஜடேஜாவும் களத்தில் இருந்தனர். இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை விஹாரியும் ஜடேஜாவும் தொடர்ந்து ஆடிவருகின்றனர். 

இதற்கிடையே இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் காம்பீர், இங்கிலாந்து வீரர்கள் குக்கும் பட்லரும் சிறப்பாக தொடங்கியதோடு தொடர்ந்து நன்றாக ஆடி ரன்களை குவித்தனர். அதனால் அந்த அணி 332 ரன்களை சேர்த்தது. இந்திய வீரர்கள் புஜாரா, ராகுல் மற்றும் கோலி ஆகிய மூவரும் நன்றாக தொடங்கினர். ஆனால் அதை தொடர தவறிவிட்டனர். அதுதான் வித்தியாசம்.

தற்போதைய சூழலில் விஹாரியும் ஜடேஜாவும் சிறப்பாக ஆடி ரன்களை குவிக்க வேண்டு. 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், இன்னும் 4 விக்கெட்டுகளே கையில் இருக்கிறது. ஆனால் இங்கிலாந்தை விட அதிக ரன்கள் பின் தங்கியிருப்பதால், முடிந்தளவிற்கு ரன்களை சேர்க்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட அதிக ரன்கள் பின் தங்க விட்டுவிடாமல், ரன்களை சேர்க்க வேண்டும் என காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

காம்பீரின் கருத்துப்படி, எப்படியும் இந்திய அணி, இங்கிலாந்து எடுத்த 332 ரன்களை எடுக்காது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது. காம்பீரின் கருத்துக்கு விஹாரியும் ஜடேஜாவும் தங்களது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுப்பார்களா என்று பார்ப்போம்.

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய ஆட்டம் தொடங்கி ஒன்றே கால் மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இதுவரை இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடிவருகின்றனர். 
 

click me!