தம்பி நீயெல்லாம் ஒரு ஆல் ரவுண்டரா..? பாண்டியாவை கழுவி ஊற்றும் கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Sep 3, 2018, 4:03 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியாவை ஒரு ஆல்ரவுண்டராகவே நினைக்கவில்லை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

ஹர்திக் பாண்டியாவை ஒரு ஆல்ரவுண்டராகவே நினைக்கவில்லை என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு வந்தவுடன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல ஆல்ரவுண்டர் இந்திய அணிக்கு கிடைத்துவிட்டதாக அனைவரும் கருதினர். அதிலும் கடந்த ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனி ஒருவனாக போராடி 43 பந்துகளுக்கு 76 ரன்கள் குவித்தார் ஹர்திக் பாண்டியா.

 

பாண்டியாவின் அந்த இன்னிங்ஸ் தான் அவர் மீதான நம்பிக்கையை வளர்த்தது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங்கிலோ அல்லது பவுலிங்கிலோ தனது பங்களிப்பை அளித்துவிடுவார் பாண்டியா. பாண்டியாவின் ஆட்டத்திறனை பார்த்து, முன்னாள் கேப்டனும் ஆல் ரவுண்டருமான கபில் தேவுடன் சிலர் ஒப்பிட்டனர்.

ஆனால் காலப்போக்கில் ஹர்திக் பாண்டியா, ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக செயல்படவில்லை. அதிலும் டெஸ்ட் போட்டிகளில் சுத்தமாக ஆல்ரவுண்டர் போல் ஆடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாண்டியா சரியாக ஆடாததால் அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்பிறகு மூன்றாவது போட்டியில் சிறப்பாக ஆடி 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்தார். இதன்மூலம் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். 

அதேபோலவே நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ஆடுவார் என்று பார்த்தால், மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிட்டார். நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், நீங்கள் ஹர்திக் பாண்டியாவை ஆல் ரவுண்டர் என அழைக்க விரும்புகிறீர்களா? யார் யாரெல்லாம் பாண்டியாவை ஆல் ரவுண்டர் என அழைக்க விரும்புகிறீர்களோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் நான் அவரை ஆல்ரவுண்டராக நினைக்கவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

click me!