அஷ்வின் பந்தில் அடிவாங்கிய ரிஷப் பண்ட்!! வலியால் துடித்த இளம் விக்கெட் கீப்பர்

By karthikeyan VFirst Published Sep 3, 2018, 2:44 PM IST
Highlights

நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் வீசிய பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் தொண்டையை பதம்பார்த்தது. எனினும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.
 

நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஷ்வின் வீசிய பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் தொண்டையை பதம்பார்த்தது. எனினும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே அசத்தலாக ஆடினார். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலும் ரிஷப் பண்ட் ஆடினார். 

நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப்பிற்கு சோதனை மேல் சோதனையாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் 29 பந்துகளை சந்தித்து டக் அவுட்டானார் ரிஷப். இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடிக்காமலேயே 30 ரன்களுக்கு மேல் பைஸின் மூலமே கிடைத்தது. லெக் திசையில் வீசப்பட்ட நிறைய பந்துகளை பிடிக்க முடியாமல் விட்டார் ரிஷப். விக்கெட் கீப்பிங் நன்றாகத்தான் செய்தார். எனினும் மிகவும் விலகி சென்ற பந்துகளை பிடிக்க முடியாமல் விட்டார். அதனால் பைஸின் மூலமே இங்கிலாந்து அணிக்கு 30 ரன்களுக்கு மேல் கிடைத்தன. 

ஸ்பின் பவுலிங்கின்போது ஸ்டம்பிற்கு அருகே நின்று விக்கெட் கீப்பிங் செய்தபோது நிறைய பந்துகளை கைகளில் பிடிக்க முடியாமல் தவறவிட்டார் ரிஷப். 77வது ஓவரில் சாம் கரனுக்கு அஷ்வின் வீசிய ஒரு பந்து சுழன்றவாறு நன்கு பவுன்ஸாகி சென்றது. அந்த பந்து ரிஷப் பண்ட்டின் தொண்டையில் அடித்ததால் வலியால் துடித்தார் ரிஷப். பின்னர் அணியின் பிசியோ வந்து அவருக்கு சிகிச்சை அளித்தார். நல்ல வேளையாக ரிஷப்பிற்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. 

pic.twitter.com/UfC69z8bUq

— Gentlemen's Game (@DRVcricket)

ரிஷப் பண்ட்டிற்கு அறிமுக டெஸ்ட் தொடர் அவ்வளவு எளிதானதாக இருந்துவிடவில்லை. 
 

click me!