
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெறுகிறாது. இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவுக்கான கோல்களை ஷிலானந்த் லக்ரா 10-வது நிமிடத்தில், குர்ஜத் சிங் 42 மற்றும் 57-வது நிமிடத்தில், சுமித் குமார் 48-வது நிமிடத்தில், ரமன்தீப் சிங் 51-வது நிமிடத்தில் ஆகியோர் அடித்தனர். மலேசியாவுக்கான கோலை ஃபைஸல் சாரி 33-வது நிமிடத்தில் அடித்தார்.
இதன் மூலமாக இறுதிச்சுற்று வாய்ப்பை இந்தியா உறுதி செய்ய, தனது கடைசி ரவுண்ட் ராபின் சுற்றில் வரும் நாளை அயர்லாந்தை அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் அயர்லாந்து ஒரு வெற்றி கூட பெறவில்லை.
தற்போதைய நிலையில், புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ஆர்ஜென்டீனா 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மலேசியா 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து 5 புள்ளிகள் நான்காவது இடத்திலும், இந்தியா 4 புள்ளிகள் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.