
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை காலிறுதிக்கு முன்னேறியது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை, இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி - அமெரிக்காவின் ஜேம்ஸ் செரட்டானி இணையுடன் மோதியது.
இதில், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஃபாபியோ ஃபாக்னினி - ஜேம்ஸ் செரட்டானி இணையைத் தோற்கடித்தது பயாஸ் - பூரவ் இணை.
பயஸ் – பூரவ் இணை தங்களின் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்தின் மார்கஸ் டேனியல் - பிரேசிலின் மார்செலோ டெமாலினர் இணையுடம் மோதுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.