
பிர்மிங்ஹாமில் நடந்து வரும் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பாட்மிண்டன் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
இறுதிப்போட்டியில் மலேசியாவிடம் 3-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததையடுத்து, இந்தியா வெள்ளியுடன் விடைபெற்றது. இந்திய அணியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து மட்டுமே வெற்றி பெற்றார்.
ஆடவர் ஒற்றையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர், ஆடவர் இரட்டையர் என அனைத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்ததையடுத்து, வெள்ளியோடு திரும்பியது.
காமன்வெல்த் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது
காமென்வெல்த் போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த இந்திய அணி, அதைக் தக்கவைக்க முடியாமல் வெள்ளி வென்றது. கோல்கோஸ்ட் நகரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிடம் சாம்பியன் பட்டத்தை மலேசியா இழந்திருந்தது. அதற்குப் பழிதீர்த்து மீண்டும் தங்கம் வென்றுள்ளது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் மலேசியா வீராங்கனை கோ ஜின் வீயை 22-20, 21-17 என்ற நேர் செட்களி்ல் வீழ்த்தி சிந்து வெற்றி பெற்றார். முதல் கேமில் சிந்து 11-6 என்றகணக்கில் முன்னிலையில் இருந்தார்.
ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை
அதன்பின் கோ ஜின் நெருக்கடி கொடுத்து ஆடினாலும், இறுதியில் 22-20 என்ற கணக்கில் சிந்து செட்டைக் கைப்பற்றினார். 2-வது கேமிலும் சிந்து 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். ஆனால், சிந்துவின் ஆட்டத்துக்கு முன் கோ ஜின்னால் தாக்குப்பிடிக்க முடியால் 21-17 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் மலேசிய வீரர் யாங்கிடம் 19-21, 21-6, 16-21 என்ற செட்களில் போராடி தோல்வி அடைந்தார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் நடந்த ஆட்டத்தில், மலேசிய ஜோடி டெங் பாங் ஆரோன் சியா, வூ இக் சோ ஜோடியிடம் 18-21, 15-21 என்ற செட்களில் இந்திய வீரர்கள் சத்விக் ரான்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி அடைந்தது.
நல்ல பிளேயரை சீரழித்துவிடாதீர்கள்..! ரோஹித்தை விளாசிய ஸ்ரீகாந்த்
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் த்ரீஸா ஜோலி, காயத்ரி கோபிசந்த் ஜோடியை 18-21, 17-21 என்ற செட்களில் தோற்கடித்தது மலேசியாவின் தின்னா முரளிதரன், கூங் லீ பியர்லி ஜோடி
மலேசிய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்ததையடுத்து, கலப்பு இரட்டையர் ஆட்டம் நடைபெறவில்லை.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.