இலங்கையை ஒயிட் வாஷ் செய்தபிறகு ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்களின் இடங்கள்…

First Published Aug 16, 2017, 9:23 AM IST
Highlights
Sri Lankan veteran made it to the ICC rankings after Indian players ...


இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்காளான கே.எல்.ராகுல் 9-வது இடத்தையும், ஷிகர் தவன் 28-வது இடத்தையும் பெற்றனர்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் இரு சதங்களுடன் 358 ஓட்டங்கள் குவித்த ஷிகர் தவன், 10 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் அவர் தனது அதிகபட்ச தரவரிசையை எட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான கடைசி இரு போட்டிகளில் விளையாடிய கே.எல். ராகுல் இரு அரை சதங்களுடன் 142 ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் அவர் இரு இடங்கள் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்டில் 96 பந்துகளில் 108 ஓட்டங்கள் குவித்த ஹார்திக் பாண்டியா 45 இடங்கள் முன்னேறி 68-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா 4-வது இடத்திலும், கேப்டன் கோலி 5-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் முகமது சமி ஓர் இடம் முன்னேறி 19-வது இடத்தையும், உமேஷ் யாதவ் ஓர் இடம் முன்னேறி 21-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 29 இடங்கள் முன்னேறி 58-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கை வீரர் சன்டாகன் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 132 ஓட்டங்களைல் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 16 இடங்கள் முன்னேறி 57-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்தின் ஆண்டர்சன், இந்தியாவின் அஸ்வின் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜடேஜா முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அஸ்வின் 3-வது இடத்தில் உள்ளார்.

tags
click me!