
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 28-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸை இரண்டு முறை ஆல் அவுட்டாக்கி புணேரி பால்டான் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது..
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 28-வது ஆட்டம் அகமதாபாதில் நேற்றூ நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. முதல் பத்து நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் 5-5 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் இருந்தன.
புணேரி பால்டான் வீரர் ஜிபி மோர் ரைடின் மூலம் தனது 4-வது புள்ளியைப் பெற, அந்த அணி 7-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிறகு அசத்தலாக ஆடிய புணேரி பால்டான், 15-வது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை ஆல் அவுட்டாக்கியது. இதனால் புணேரி பால்டான் 12-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் 18-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஆல் அவுட்டாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெங்கால் வாரியர்ஸ், சூப்பர் டேக்கிள் மூலம் அதிலிருந்து தப்பியது.
முதல் பாதி ஆட்டநேர முடிவில் புணேரி பால்டான் 17-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் புணேரி பால்டன் 25-வது 20-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பிறகு 2-வது முறையாக பெங்கால் வாரியர்ஸ் ஆல் அவுட்டாக, புணேரி பால்டான் 24-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பெங்கால் அணியின் முன்னணி ரைடரான குன் லீ 26-ஆவது நிமிடத்தில்தான் ரைடின் மூலம் முதல் புள்ளியைப் பெற்றார். அதேநேரத்தில் தொடர்ந்து அபாரமாக ஆடிய புணேரி பால்டான் 30-15 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இறுதியில் புணேரி பால்டான் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.