சரியா ஆடாதது கேப்டனாவே இருந்தாலும் இதுதான் கதி!!

By karthikeyan VFirst Published Feb 6, 2019, 11:43 AM IST
Highlights

அணிக்கு முன்னுதாரணமாக இருந்து சிறப்பாக ஆடி வழிநடத்தி செல்ல வேண்டிய கேப்டன் தினேஷ் சண்டிமால், நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பிய இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால், தென்னாப்பிரிக்க தொடரில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த இரண்டு போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 366 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த தொடரில் இலங்கை அணி பேட்டிங்கில் சொதப்பியது. அணிக்கு முன்னுதாரணமாக இருந்து சிறப்பாக ஆடி வழிநடத்தி செல்ல வேண்டிய கேப்டன் தினேஷ் சண்டிமால், நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த அணி இரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது. 

இதையடுத்து இலங்கை அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடருக்கான அணியிலிருந்து கேப்டன் தினேஷ் சண்டிமால் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கருணரத்னே தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டனாக செயல்பட உள்ளார். 

தினேஷ் சண்டிமால் மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பும் வகையில் உள்நாட்டு போட்டிகளில் ஆட உள்ளார். கடந்த 2017ம் ஆண்டு மேத்யூஸுக்கு பிறகு கேப்டனாக தினேஷ் சண்டிமால் பொறுப்பேற்றார். 
 

click me!