தோனியை எந்த வரிசையில் இறக்கலாம்..? இந்திய அணிக்கு ஒரு சிக்கல்னா காப்பாற்ற தோனி இருக்காரு.. கும்ப்ளே அதிரடி

By karthikeyan VFirst Published Feb 6, 2019, 11:03 AM IST
Highlights

மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட நிலையில், பேட்டிங் வரிசை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து வருவது, ஒரு அணியாக இந்திய வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

ரோஹித், தவான், கோலி என இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் மிக வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என பவுலிங் யூனிட்டும் பயங்கர மிரட்டலாக உள்ளது. இந்திய அணியின் பிரச்னையாக இருந்துவந்த மிடில் ஆர்டருக்கு ராயுடு, கேதர் ஜாதவ் மூலம் தீர்வு காணப்பட்ட திருப்தியில் இந்திய அணி உள்ளது. 

இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்டையும் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று கவாஸ்கர், கங்குலி ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே கடந்த ஓராண்டாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி, ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடி ஹாட்ரிக் அரைசதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 

4ம் வரிசையில் ராயுடு உறுதி செய்யப்பட்டு விட்டதாக, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் கேப்டன் கோலி கூறியிருந்த நிலையில் தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதால் அவரை நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. அதற்கேற்றவாறு இடையில் சில போட்டிகளில் ராயுடு சொதப்பினார். எனினும் தோனியை ஐந்தாவது இடத்தில் இறக்குவதுதான் சரியாக இருக்கும் கேப்டன் கோலி கருத்து தெரிவித்திருந்தார். 

மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட நிலையில், பேட்டிங் வரிசை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தான் எந்த வரிசையிலும் இறங்க தயாராகவே இருப்பதாக தோனி அதிரடியாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தோனி எந்த வரிசையில் இறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கும்ப்ளே, தோனி எந்த வரிசையில் இறங்க வேண்டும் என்ற விவாதம் தீவிரமாக நடந்துவருகிறது. பலரும் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். தோனி நான்காம் வரிசையில் இறங்குவது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவில் இழக்கும்பட்சத்தில் தோனியை கண்டிப்பாக நான்காவது வரிசையில் இறக்கலாம். அப்படி செய்தால், அந்த இக்கட்டான சூழலில் அவருக்கு தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு களத்தில் நிலைத்து ஆட ஏதுவாக இருக்கும். அனுபவ வீரரான தோனி, களத்தில் நிலைத்துவிட்டால் இறுதி வரை நின்று ஆடுவார். மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினால் போதும்.

ஆஸ்திரேலிய தொடர், ஐபிஎல் என தோனி தொடர்ந்து ஆட இருப்பதால், அவையெல்லாம் தோனி பேட்டிங்கில் தொடர்ந்து அவரது ரிதமில் இருக்க உதவும். டாப் ஆர்டர்கள் நன்றாக ஆடும்பட்சத்தில் தோனியை 4ம் வரிசையில் இறக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் டாப் ஆர்டர் விக்கெட்டுகள் விரைவில் இழந்துவிட்ட நிலையில், தோனியை நான்காம் வரிசையில் இறக்குவது அவசியம் என்று கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!