
பதினேழு வயதிற்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் நைஜர் அணியை வீழ்த்தியது.
பதினேழு வயதிற்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 'டி' பிரிவில் ஸ்பெயின் - நைஜர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொச்சியில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஸ்பெயின் அசத்தலாக ஆடிய ஸ்பெயின் அணி, ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணியின் ஜுவான் மிரான்டா பாஸ் செய்த பந்தை அற்புதமாக கோலாக்கினார் சக வீரர் அபெல் ருய்ஸ்.
நைஜர் தனது முதல் கோலுக்கு தடுமாறி வந்த நிலையில், ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அபெல் ருய்ஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் சீஸர் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 3-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தது ஸ்பெயின். அந்த கோலை அணியின் செர்ஜியோ கோம்ஸ் அடித்தார்.
இறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.
இது இந்த உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின் பெறும் முதல் வெற்றியாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.