இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் அதிரடியில் இறங்கியது ஆஸ்திரேலியா…

Asianet News Tamil  
Published : Oct 11, 2017, 08:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் அதிரடியில் இறங்கியது ஆஸ்திரேலியா…

சுருக்கம்

Australia beat indai by 8 wickets

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச தீர்மானித்ததால் முதலில் பேட் செய்த இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

ரோஹித் சர்மா 8 ஓட்டங்கள், ஷிகர் தவன் 2 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் கோலி டக் ஔட் ஆனார். மணீஷ் பாண்டே 6 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த தோனி 13 ஓட்டங்கள், ஹார்திக் பாண்டியா 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

புவனேஸ்வர் குமார் 1 ஓட்டம், குல்தீப் யாதவ் 16 ஓட்டங்கள், பூம்ரா 7 ஓட்டங்கள் என அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால் 20 ஓவர்களில் 118  ஓட்டங்களை எட்டியது இந்தியா. யுவேந்திர சாஹல் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் பெஹ்ரென்டார்ஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆடம் ஸம்பா 2 விக்கெட்டுகளும், கோல்டர் நீல், ஆன்ட்ரு டை, ஸ்டோனிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 119 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியிலும் தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், ஆரோன் ஃபிஞ்ச் 8 ஓட்டங்கள், கேப்டன் வார்னர் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும், அடுத்து இணைந்த ஹென்ரிக்ஸ் - டிராவிஸ் ஹெட் இணை அபாரமாக ஆடி அணியை வெற்றிக்கு வழி நடத்தியதால் 15.3 ஓவர்களில் 122 ஓட்டங்கள் எடுத்து வென்றது ஆஸ்திரேலியா.

ஹென்ரிக்ஸ் 62 ஓட்டங்கள், டிராவிஸ் ஹெட் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய தரப்பில் புவனேஸ்வர், பூம்ரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய பெஹ்ரென்டார்ஃப் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதையடுத்து மூன்று ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?
Vaibhav Sooryavanshi: 15 பந்தில் அரைசதம், 36 பந்தில் சதம்... 5 மெகா சாதனைகளை உடைத்த இளம் புயல்..!