ஏடிபி சேலஞ்சர்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார் யூகி பாம்ப்ரி…

Asianet News Tamil  
Published : Oct 11, 2017, 08:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
ஏடிபி சேலஞ்சர்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார் யூகி பாம்ப்ரி…

சுருக்கம்

ATP Challenger Yuki Pompri who hugged the second round

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் நெடோவ்யேசோவை எதிர்கொண்டார் இந்தியாவின் யூகி பாம்ப்ரி.

இதன் முதல் செட்டில் யூகி 3-0 என முன்னிலையில் இருந்தபோது இடுப்பு வலி காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அலெக்ஸாண்டர் அறிவித்தார்.

இதனையடுத்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார் யூகி பாம்ப்ரி. அடுத்த சுற்றில் போலாந்தின் கமில் மஜ்ஷர்ஸாக்கை எதிர்கொள்கிறார்.

இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி - திவிஜ் சரண் இணை, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அர்ஜென்டீனாவின் கில்லெர்மோ டுரான் - ஆன்ட்ரெஸ் மோல்டேனி இணையை வீழ்த்தியது.

இதனையடுத்து யூகி - திவிஜ் இணை தனது 2-வது சுற்றில் உக்ரைனின் டெனிஸ் மோல்சானோவ் - மோனாகோவின் ரோமெய்ன் அர்னியோடோ இணையை எதிர்கொள்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Lungi Ngidi Injury: தலையில் அடிபட்டு மருத்துவமனையில் லுங்கி இங்கிடி... இப்போது எப்படி இருக்கிறார்..?
Vaibhav Sooryavanshi: 15 பந்தில் அரைசதம், 36 பந்தில் சதம்... 5 மெகா சாதனைகளை உடைத்த இளம் புயல்..!