இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான போட்டியில் தென்னாப்பிரிக்க அதிரடி வீரர்!!

By karthikeyan VFirst Published Dec 9, 2018, 4:29 PM IST
Highlights

இந்திய  மகளிர் அணிக்கு புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யுமாறு சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டது. ஆனால் நிர்வாகக்குழுவின் கோரிக்கையை கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உள்ள சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய மூவரும் மறுத்துவிட்டனர்.
 

இந்திய மகளிர் அணியின் இடைக்கால பயிற்சியாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார் ரமேஷ் பவார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி மகளிர் டி20 உலக கோப்பையின் அரையிறுதிவரை முன்னேறியது. அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. அந்த போட்டியில் மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மிதாலி ராஜும் ரமேஷ் பவாரும் பரஸ்பரம் குற்றம்சாட்டினார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை ரமேஷ் பவார் முடித்து வைக்க நினைப்பதாக மிதாலி ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து இருவரிடமும் பிசிசிஐ தனித்தனியாக விசாரணை நடத்தியது. அதன்பிறகு ரமேஷ் பவாரை அணியின் பயிற்சியாளராக நீடிக்க வைக்க பிசிசிஐ விரும்பவில்லை. ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலம் நவம்பர் 30ம் தேதியுடன் முடிந்த நிலையில், புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்திய  மகளிர் அணிக்கு புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யுமாறு சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டது. ஆனால் நிர்வாகக்குழுவின் கோரிக்கையை கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உள்ள சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய மூவரும் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவாரே நீடிக்கக்கோரி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதினார். எனினும் அதை விரும்பாத பிசிசிஐ நேர்காணல் நடத்தி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புதிய பயிற்சியாளரை நியமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்திய மகளிர் அணிக்கான பயிற்சியாளர் போட்டியில் வெங்கடேஷ் பிரசாத், டாம் மூடி ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிப்ஸும் உள்ளார். இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராவதற்கு கிப்ஸ் ஆவலாக இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுபவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக நீடிப்பார். மேலும் அவருக்கு ஆண்டுக்கு 3 முதல் 4 கோடி வரை ஊதியமாக வழங்கப்படும்.

click me!