இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து!! ஆஸ்திரேலிய ஸ்போர்ட்ஸ் சேனலில் காஷ்மீரின் 7 வயது சிறுவனை புகழ்ந்த ஷேன் வார்னே.. வீடியோ

By karthikeyan VFirst Published Dec 9, 2018, 2:50 PM IST
Highlights

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 7 வயது சிறுவனின் ஸ்பின் பவுலிங்கை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே பாராட்டியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 7 வயது சிறுவன், ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும் அளவிற்கு ஒரே பந்தில் பிரபலமாகியுள்ளான்.

காஷ்மீரை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், ஸ்பின் பவுலிங் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இடது கை பேட்டிங் ஆடிய சிறுவனை அபாரமான ஸ்பின் பந்தில் கிளீன் போல்டாக்கினான் அந்த சிறுவன். அந்த விக்கெட்டை சிறுவனுடன் இணைந்து அவனது அணி சிறுவர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த வீடியோவை டுவிட்டரில், நூற்றாண்டின் சிறந்த பந்து என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது. அந்த வீடியோவை கண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, டுவிட்டரில் அந்த சிறுவனை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

This is outstanding ! Well bowled young man 👍 https://t.co/NfADPHXj4F

— Shane Warne (@ShaneWarne)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்துவரும் டெஸ்ட் தொடரை ஒளிபரப்பிவரும் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனை வார்னே வர்ணனை செய்துகொண்டிருந்தபோது, வார்னேவின் டுவீட்டை பார்த்துவிட்டு அந்த சிறுவன் குறித்து பேசப்பட்டது. அப்போது, அந்த சிறுவன் வீசிய பந்து நூற்றாண்டின் சிறந்த பந்துதான் என வார்னே ஒப்புக்கொண்டார்.

காஷ்மீர் மாநிலத்தின் ஏதோ ஒரு ஊரில் உள்ள 7வயது சிறுவன், ஒரே பந்தில் ஆஸ்திரேலிய சேனலில் பேசப்பட்டு, வார்னேவிடமிருந்து பாராட்டையும் பெற்றுவிட்டார்.

click me!