அஷ்வின், ஷமி அசத்தல்.. வெற்றியை நோக்கி இந்தியா!!

By karthikeyan VFirst Published Dec 9, 2018, 1:34 PM IST
Highlights

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் உஸ்மான் கவாஜாவை வீழ்த்திய அஷ்வின், இந்தமுறையும் வீழ்த்தினார். கவாஜாவின் அற்புதமான கேட்ச்சை ரோஹித் சர்மா பிடிக்க, அவர் வெறும் 8 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து ஹேண்ட்ஸ்கம்ப்பை ஷமி வெளியேற்றினார்.
 
இந்தியா -  ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 250 ரன்களை எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஃபின்ச், இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டியவர். அந்த பந்து நோ பாலானதால் தப்பினார். எனினும் அஷ்வினிடம் வீழ்ந்தார். இதையடுத்து மார்கஸ் ஹாரிஸை 26 ரன்களில் ஷமி தன் வேகத்தில் வெளியேற்றினார்.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் உஸ்மான் கவாஜாவை வீழ்த்திய அஷ்வின், இந்தமுறையும் வீழ்த்தினார். கவாஜாவின் அற்புதமான கேட்ச்சை ரோஹித் சர்மா பிடிக்க, அவர் வெறும் 8 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து ஹேண்ட்ஸ்கம்ப்பை ஷமி வெளியேற்றினார்.

இதைத்தொடர்ந்து ஷான் மார்ஷுடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி நாளான நாளை 229 ரன்கள் தேவை. இந்திய அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை. நாளை ஃபிரெஷ்ஷாக ஆட்டத்தை தொடங்கியதும் அந்த அணியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் போதும். இந்திய அணிக்கு வெற்றி எளிதாகிவிடும். 

click me!