இரண்டு மணிநேரம் காத்திருந்தும் மழை விடாததால் தென் ஆப்பிரிக்க - இந்திய ஆட்டம் கைவிட்டப்பட்டது...

First Published Feb 22, 2018, 11:05 AM IST
Highlights
South African - Indian game dropped because rain


தென் ஆப்பிரிக்க - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4-வது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

தென் ஆப்பிரிக்க - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 4-வது டி20 ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

சென்சுரியனில் நேற்று தொடங்கிய 4-வது ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசத் தீர்மானித்தது.

பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அப்போது, மழை குறுக்கிட்டது. சுமார் 2 மணி நேர காத்திருப்புக்குப் பிறகு ஆட்டத்தை கைவிடலாம் என்று நடுவர்கள் முடிவு செய்தனர்.

டி20 கேப்டனான ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் இத்தொடரை கைப்பற்ற முடியும்.

மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணிக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி வென்றது.

அதனைத் தொடர்ந்து, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடி வருகின்றன.

கடந்த 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலும்கூட இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றிவிடும்.

tags
click me!