முதல் நாள் முதல் ஆட்டம்; 229 ஓட்டங்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா…

First Published Mar 9, 2017, 12:54 PM IST
Highlights
south africa vs new zealand


நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்கள் குவித்தது.

நியூஸிலாந்தின் டுனெடின் நகரில் நேற்றுத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டீபன் குக் 3 ஓட்டங்களிலும், ஆம்லா, டுமினி ஆகியோர் தலா ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தனர்.

இதையடுத்து தொடக்க வீரர் டீன் எல்கருடன் இûணைந்தார் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ். இந்த ஜோடி ஆரம்பம் முதலே எச்சரிக்கையோடு ஆட, தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. டீன் எல்கர் 124 பந்துகளில் அரை சதமடிக்க, டூபிளெஸ்ஸிஸ் 111 பந்துகளில் அரை சதம் கண்டார்.

தென் ஆப்பிரிக்கா 148 ஓட்டங்களை எட்டியபோது டூபிளெஸ்ஸிஸ் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டூபிளெஸ்ஸிஸ் - எல்கர் இணை 4-ஆவது விக்கெட்டுக்கு 126 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து டெம்பா பெüமா களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய டீன் எல்கர் 197 பந்துகளில் சதத்தை எட்டினார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 7-ஆவது சதம் இது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

டீன் எல்கர் 262 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 128, டெம்பா பெüமா 101 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நிற்கின்றனர். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் குவித்துள்ளது.

நியூஸிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 2 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

click me!