
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர் மூன்றாவது சுற்றிற்கு முன்னேறியுனார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 7-6 (2), 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் தகுதி நிலை வீரரான பிரான்செஸ் டியாஃபோவை தோற்கடித்தார்.
2-ஆவது சுற்றில் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் ஹோராஸியோ இஸபல்லோஸை தோற்கடித்தார்.
வாவ்ரிங்கா தனது 3-ஆவது சுற்றில் டுனிசியாவின் மலேக் ஜேஸ்ரியை எதிர்கொள்கிறார்.
மகளிர் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 0-6, 3-6 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் லூசிச் பரோனியிடம் தோல்வி அடைந்தார்.
ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜங் ஷூவாயை தோற்கடித்தார்.
செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் யூலியா புதின்சேவாவை தோற்கடித்தார்.
இருவரும் 4-ஆவது சுற்றிற்கு முன்னேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.