314 ஓட்டங்களை எடுத்து நியூஸிலாந்தை தெறிக்கவிட்ட தென் ஆப்பிரிக்கா…

Asianet News Tamil  
Published : Mar 27, 2017, 11:55 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
314 ஓட்டங்களை எடுத்து நியூஸிலாந்தை தெறிக்கவிட்ட தென் ஆப்பிரிக்கா…

சுருக்கம்

The third Test against the New Zealand Cricket

நியூஸிலாந்தை எதிர்த்து மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 89.2 ஓவர்களில் 314 ஓட்டங்கள் எடுத்து தெறிகக்விட்டது.

நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ஒட்டங்கள் எடுத்தது,

இரண்டாவது நாளான நேற்றுத் தொடர்ந்து ஆடிய அந்த அணியில் டி காக் 118 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 90, கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 108 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ஒட்டங்கள் சேர்த்து வெளியேறினர்.

இறுதியில் அந்த அணி 89.2 ஓவர்களில் 314 ஒட்டங்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தது.

நியூஸிலாந்து தரப்பில் மட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆட மட்டையை கையிலெடுத்த நியூஸிலாந்து அணி 25.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது வெளிச்சமின்மையால் 2-ஆவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

டாம் லதாம் 42, ஜீத் ரவால் 25 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ருத்ரதாண்டவமாடிய ருத்ராஜ்.. நியூசிலாந்து தொடருக்கு 'சீட்' கன்பார்ம்.. சிஎஸ்கே ரசிகர்கள் குஷி!
மீண்டும் கம்பேக் கொடுத்த ஷமி.. இந்திய அணிக்கு கிடைத்த குட் நியூஸ்..!