ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி ஒரு புதிய பெருமையை சிங்கப்பூருக்கு தேடித்தந்துள்ளார் என்று தான் கூறவேண்டும்.
இன்று அக்டோபர் 2ம் தேதி (திங்கட்கிழமை) சீனாவில் உள்ள ஹாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு மைய மைதானத்தில் அவர் 23.03 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். சாந்தி ஏற்கனவே 200மீ ஒட்டப்பந்தையத்தில் 22.57 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த இந்த 200 மீ போட்டியில் சிங்கப்பூரின் சாந்தி முதலிடம் பிடித்த நிலையில், சீனாவின் லி யுடிங் 23.28 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து 2வது இடத்தையும், பஹ்ரைனின் எடிடியாங் ஓடியோங் 23.48 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
undefined
ICC World Cup 2023: உலகக் கோப்பையில் இந்தியா விளையாடிய 89 போட்டிகளில் எத்தனை வெற்றி?
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த, பெண்களுக்கான 100 மீ ஓட்டத்தில் சாந்தி பெரேரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார், சீனாவின் ஜி மான்கியிடம் 0.04 வினாடிகளில் அவர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று சாந்தி பெற்ற இந்த வெற்றி, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் பெரும் முதல் தடகள தங்கப் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக கடந்த 1974 ஆம் ஆண்டு ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 400 மீ ஓட்டத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்திய சீ ஸ்வீ லீ என்பவர்தான் கடைசியாக இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார் என்று சிங்கப்பூர் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
சாந்தி பெரேராவின் முதல் 200 மீட்டர் ஆசிய விளையாட்டு இறுதிப் போட்டி இதுவாகும். கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடந்த தனது "ஹீட்" போட்டியில் 23.14 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து கடந்து முதலிடம் பிடித்து போட்டிக்குத் தகுதி பெற்றார் அவர்.