2-வது ரவுண்டுக்கு முன்னேறிய சிந்து, பிரணாய்…

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 02:00 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
2-வது ரவுண்டுக்கு முன்னேறிய சிந்து, பிரணாய்…

சுருக்கம்

பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் 2-ஆவது ரவுண்டுக்கு முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சிந்து தனது முதல் சுற்றில் 21-9, 29-27 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் இப் புய் இன்னை தோற்கடித்தார்.

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் எச்.எஸ்.பிரணாய் 21-16, 21-18 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் பூன்சாக் பொன்சனாவை தோற்கடித்தார்.

அடுத்த சுற்றில் சீன தைபேவின் செள டியென் சென்னை எதிர் கொள்கிறார் பிரணாய்.

அதேநேரத்தில் மற்றொரு ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்கிடம் தோல்வி அடைந்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!