இந்திய ஹாக்கி அணி முன்னேற்றம்…

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 02:48 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
இந்திய ஹாக்கி அணி முன்னேற்றம்…

சுருக்கம்

குயான்டன்,

ஆசிய கோப்பை வலைகோற் பந்தாட்ட போட்டியில் செவ்வாய்க்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9–0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்தது.

நான்காவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்கள் வலைகோற் பந்தாட்ட போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் செவ்வாய்க்கிழமை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்திற்று.

முதல் பாதியில் 4–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி பிற்பாதி ஆட்டத்திலும் கோல் சரமாரியாக பொழிந்தது.

இதனால் திகைத்து நின்றசீ னா அணியால் கடைசி வரை பதில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

ஆட்ட முடிவில் இந்திய அணி 9–0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 3–வது வெற்றியை சுவைத்து அரையிறுதிக்கு முன்னேறியது.

ஒரு ஆட்டத்தில் டிரா கண்டு இருந்தது.

4–வது ஆட்டத்தில் ஆடிய சீன அணி சந்தித்த 3–வது தோல்வி இதுவாகும். அந்த அணி ஒரு ஆட்டத்தில் வென்று இருந்தது.

இந்திய அணி தரப்பில் ஆகாஷ்தீப்சிங் (9–வது, 39–வது நிமிடம்), அக்பான் யூசுப் (19–வது, 40–வது நிமிடம்), ஜஸ்ஜித்சிங் குலார் (22–வது, 51–வது நிமிடம்) தலா 2 கோலும், ரூபிந்தர்பால்சிங் (25–வது நிமிடம்), நிக்கின் திம்மையா (34–வது நிமிடம்), லலித் உபாத்யாய் (37–வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.

முன்னதாக நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 4–3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. 4–வது ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தான் அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். 2 ஆட்டத்தில் தோல்வி கண்டு இருந்தது. 4–வது ஆட்டத்தில் ஆடிய ஜப்பான் அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை.

புதன்கிழமை நடைபெறும் லீக் ஆட்டங்களில் தென்கொரியா–ஜப்பான் (பிற்பகல் 3.30 மணி), இந்தியா–மலேசியா (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC புள்ளிப் பட்டியல்: இங்கிலாந்துக்கு சரிவு, ஆஸி. ஆதிக்கம்; இந்தியா எந்த இடத்தில்?
டி20 உலகக் கோப்பை 2026: ஐபிஎல் வீரர்களுடன் நியூசி. அணி, சான்ட்னர் கேப்டன்