
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி அணி.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியது. இதனால், இரண்டு அணிகளுக்கும் கோல் வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் 0-0 என்ற கணக்கில் இருந்தது.
இரண்டாவது பாதியில் மும்பை அணி தனக்கான கோல் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டது.
அந்த அணியின் டியேகோ ஃபோர்லன், ஆட்டத்தின் 79-ஆவது நிமிடத்தில் சகவீரர் பாஸ் செய்த பந்தை கோலாக்கி அற்புதம் செய்தார்.
அதன்பின், மும்பை அனி எந்த கோலையும் போடவிடாமல் கொல்கத்தா அணி ஆட்டம் காட்டியது.
ஆனால், இறுதிவரை கொல்கத்தா அணியாலும் எந்த கோலும் அடிக்க முடியாமல் போனது.
ஆட்ட முடிவில், மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.