உலக சிலம்பாட்ட போட்டி – 40 பதக்கங்களுடன் தமிழகம் வந்த வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!

By Rsiva kumar  |  First Published Feb 6, 2024, 1:29 PM IST

மலேசியாவில் நடந்த உலக சிலம்பாட்ட போட்டியில் தமிகழத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இணைந்து 5 தங்கம், 23 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என்று மொத்தமாக 40 பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.


மலேசியாவில் உலக சிலம்பாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, மலேசியா, இந்தினேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 600 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் தமிழகத்திலிருந்து 160 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலம்பத்தை முன்னும் பின்னும் சுற்றிச் சென்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் – பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வாய்ப்பு!

Tap to resize

Latest Videos

இதன் மூலமாக ஒரே இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 160 வீரர்கள் தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி மலேசியாவின் சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இணைந்து 5 தங்கம், 23 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என்று மொத்தமாக 40 பதக்கங்களை கைப்பற்றியுள்ள சாதனையோடு நாடு திரும்பியுள்ளனர். சென்னை வந்த அவர்களுக்கு தமிழ்நாடு சிலம்பாட்ட கூட்டமைப்பு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஹாக்கி வீரர் மீது போக்சோ வழக்கு!

click me!