சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து விலகினார் ஸ்பெயினின் கார்பின் முகுருஸா...

Asianet News Tamil  
Published : Jan 11, 2018, 11:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து விலகினார் ஸ்பெயினின் கார்பின் முகுருஸா...

சுருக்கம்

Sidney withdraws from international tennis

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்று வரை முன்னேறிய ஸ்பெயினின் கார்பின் முகுருஸா தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த முகுருஸா 6-3, 7-6(8/6) என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸை வீழ்த்தினார்.

அவர் காலிறுதியில் இருந்து விலகியதை அடுத்து அதில் முகுருஸாவுடன் மோத இருந்த ஆஸ்திரேலியாவின் டரியா காவ்ரிலோவா நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த சீசனில் காயம் காரணமாக முகுருஸா விலகுவது இது 2-வது போட்டியாகும். முன்னதாக அவர் கடந்த வாரம் நடைபெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்தும் விலகியிருந்தார்.

இதனிடையே, இதர காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளில் போலாந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா 7-6(7/4), 6-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கேத்தரின் பெலிஸை வீழ்த்தினார்.

இத்தாலியின் கமிலா ஜியார்ஜி 7-6(9/7), 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவாவை வீழ்த்தினார்.

போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோ 6-2, 6-1 என்ற செட் கணக்கில் லிதுவேனியாவின் ரிகார்டாஸ் பெரான்கிஸை வென்றார்.

போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவை தோற்கடித்தார்.

பிரான்ஸின் பெனாய்ட் பேர் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயரை வீழ்த்தினார்.

ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேர்ட் டொனால்ட்சனை வென்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

BBL 2026-27: பிக் பேஷ் லீக் சென்னைக்கு வந்தது எப்படி? சுவாரஸ்யமான பின்னணி இதோ!
IND vs ENG: இந்திய அணியில் அதிரடி மாற்றம்! கம்பீர், ஷ்ரேயாஸ் பதவி காலி? சாட்டையை எடுக்கும் BCCI