ஐசிசி தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிடவிடாமல் தடை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரவித்துள்ளது.
ஐசிசி தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிடவிடாமல் தடை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரவித்துள்ளது.
பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி பதவிக்காலமான 4 ஆண்டுகள் முடிந்தநிலையில் 2வதுமுறையாக தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சவுரவ் கங்குலி 2வது முறையாக போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார். ஐபிஎல் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் பதவிக்கும் கங்குலி இல்லைத் எனத் தெரியவந்தது.
அமித் ஷா வீட்டில் முடிவான கங்குலியின் விதி!ரசிகர்களுக்கு ஷாக் அளித்த 'தாதா'வின் திடீர் முடிவு
அதற்கு மாறாக மேற்கு வங்ககிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியிடப் போவதாகவும், வரும் 19ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் ஐசிசி தலைவர் பதவிக்கும் சவுரவ் கங்குலி போட்டியிடப்போவதில்லை எனத் தகவல் வெளியானது.
இதற்கிடையே, கடந்த 6ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 6-ஏ கிருஷ்ணன் மேனன் மார்க்இல்லத்தில் நடந்த சந்திப்பின்போதுதான் சவுரவ் கங்குலிக்கு 2வது முறையாக பிசிசிஐ தலைவர் பதவி வழங்கக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவும், அவரின் மகனும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் பங்கேற்றுள்ளனர்.
பிசிசிஐ அமைப்பில் எந்த பதவியும் வகிக்காத அமித் ஷா பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அந்தக் கூட்டத்தில்தான் ஐபிஎல் தலைவராக மத்தியஅ மைச்சர்அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமாலை நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
பிசிசிஐ தலைவர் பதவியை உதறிய சவுரவ் கங்குலி நாளை மும்பைக்கு சென்று, அங்கு பிசிசிஐ அதிகாரிகளிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
இந்த தகவல் குறித்து அறிந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் அவர் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில் “ சவுரவ் கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடவிடாமல் தடை செய்யப்பட்டிருக்கிறார். அவர் என்ன தவறுசெய்தார். எனக்கு வருத்தமாக இருக்கிறது.
இந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். சவுரவ் கங்குலி அனைவராலும் அறியப்பட்ட சிறந்த ஆளுமை உடையவர். இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனாக கங்குலி இருந்துள்ளார், தேசத்துக்காக தனது விளையாட்டின் மூலம் அதிக பங்களிப்பு செய்துள்ளார்.
டி20 உலக கோப்பை: தகுதிப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
வங்கத்தின் பெருமை மட்டுமல்ல கங்குலி, இந்தியாவின் பெருமையும்கூட. எதற்காக அவர் நியாயமற்ற வகையில் தலைவர் தேர்தலில் இருந்து நீக்கப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு நான் வைக்கும் பணிவான வேண்டுகோள்.
சவுரவ் கங்குலி விவகாரத்தில் கவனம் செலுத்தி, அவரை ஐசிசி தேர்தலில் பங்கெடுக்க கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும்.
சவுரவ் கங்குலியும், ஜெய் ஷாவும் 2வது முறையாக பதவியைத் தொடர நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், ஏன் எனத் தெரியவில்லை, அமித் ஷா மகன் மட்டும் பதவியில் இருக்கிறார், சவுரவ் கங்குலி பதவியில் இல்லை.
அவருக்குஎதிராக இல்லை, ஆனால், ஏன் சவுரவ் மட்டும் விட்டுவிட்டார்கள். அவர் நியாயமற்ற முறையில் வெளியேறியுள்ளார். அவருக்கு நியாயமான இழப்பீடு ஐசிசிதலைவர் பதவிதான். இந்த விவகாரத்தை பழிவாங்கும் நோக்கில், அரசியலாகப் பார்க்க வேண்டாம் என்று மத்திய அரசிடம் கேட்கிறேன். கிரிக்கெட் நலனுக்காக, விளையாட்டுக்காக நல்ல முடிவு எடுங்கள்
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்