எந்த பேட்ஸ்மேனும் செஞ்சது இல்லையா..? அவங்களுக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா? கொந்தளித்த இளம் வீரர்

By karthikeyan VFirst Published Nov 10, 2018, 2:36 PM IST
Highlights

சிகே நாயுடு டிராபி தொடரில் மேற்கு வங்கத்திற்கு எதிரான போட்டியில் உத்தர பிரதேச அணியை சேர்ந்த சிவா சிங் என்ற ஸ்பின் பவுலர் 360 டிகிரி சுழன்று வீசிய பந்தை அம்பயர் செல்லாது என்று அறிவித்துவிட்ட நிலையில், தனது பவுலிங் ஆக்‌ஷனை பிசிசிஐ அங்கீகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிகே நாயுடு டிராபி தொடரில் மேற்கு வங்கத்திற்கு எதிரான போட்டியில் உத்தர பிரதேச அணியை சேர்ந்த சிவா சிங் என்ற ஸ்பின் பவுலர் 360 டிகிரி சுழன்று பந்துவீசினார். அந்த பந்தை பேட்ஸ்மேன் அடித்துவிட்டார். எனினும் பவுலர் 360 டிகிரி சுழன்று வித்தியாசமான முறையில் பந்தை வீசியதால் அந்த பந்தை அம்பயர் செல்லாது என அறிவித்துவிட்டார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அம்பயர் அந்த பந்தை செல்லாது என்று அறிவித்தது சரியா தவறா என்று மிகத்தீவிரமாக விவாதம் நடத்தினர். பேட்ஸ்மேன்கள் பல வகையான வித்தியாசமான ஷாட்களை அடிக்கும்போது பவுலர்கள் ஏன் வித்தியாசமாக பந்துவீசக்கூடாது என்று ஆதரவுக் குரல்கள் எழுந்தன. அதேபோல பேட்ஸ்மேனின் கவனத்தை சிதறடிக்கும் விதமாக பந்துவீசியதாக எதிர்க்கருத்துகளும் உலா வருகின்றன.

Weirdo...!! Have a close look..!! pic.twitter.com/jK6ChzyH2T

— Bishan Bedi (@BishanBedi)

இந்நிலையில், இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு சிவா சிங் அளித்த பேட்டியில், எனது பவுலிங் ஆக்‌ஷனை பிசிசிஐ அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன். நிறைய பேட்ஸ்மேன்கள் வித்தியாசமாக ஆடுகிறார்கள். அப்படியென்றால் அதையும் செல்லாது என்று அறிவிக்கலாமே? எனது வேரியேஷனில் எந்த தவறும் இல்லை. விஜய் ஹசாரே உள்ளிட்ட நிறைய உள்ளூர் போட்டிகளில் இவ்வாறு பந்துவீசியுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் அம்பயர்கள் அவற்றை செல்லாது என்று அறிவித்ததில்லை என்று சிவா சிங் தெரிவித்துள்ளார். 
 

click me!