தம்பி கோலி, நீ என்ன முக்கு முக்குனாலும் சச்சினின் இந்த சாதனையை மட்டும் ஒண்ணும் செய்ய முடியாது!! தெறிக்கவிட்ட சேவாக்

By karthikeyan VFirst Published Nov 10, 2018, 2:02 PM IST
Highlights

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தாலும் அவரால் சச்சின் டெண்டுல்கரின் ஒரு சாதனையை முறியடிக்கவே முடியாது என்று முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். 
 

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தாலும் அவரால் சச்சின் டெண்டுல்கரின் ஒரு சாதனையை முறியடிக்கவே முடியாது என்று முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து கொண்டிருக்கிறார். 

ஒருநாள் போட்டிகளில் 38 சதங்கள் விளாசியுள்ள கோலி, 62 சர்வதேச சதங்களுடன், சச்சின், பாண்டிங், சங்ககராவிற்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளார் கோலி. 782 இன்னிங்ஸ்களில் ஆடி 100 சர்வதேச சதங்களை விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஆனால் கோலி வெறும் 388 இன்னிங்ஸ்களில் 62 சதங்களை விளாசியுள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை விரைவில் வீரராகவும் கோலி திகழ்கிறார். 

சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை கோலி விரைவில் முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் இருக்கும் பெரும்பாலான சாதனைகளை கோலி முறியடித்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், கோலியால் முறியடிக்கவே முடியாத சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளார் சேவாக். இதுகுறித்து இந்தியா டுடேவிற்கு அளித்த சேவாக் அளித்த பேட்டியில், சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து பேட்டிங் சாதனைகளையும் விராட் கோலி முறியடித்துவிடுவார் என்றே அனைவரும் கருதுகின்றனர். நானும் இதை பலமுறை தெரிவித்திருக்கிறேன். கோலி எத்தனை சாதனைகளை முறியடித்தாலும் 200 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் ஆடிய சாதனைகளை மட்டும் முறியடிக்கவே முடியாது. அதை முறியடிக்க வேண்டுமென்றால் 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆட வேண்டும். அதனால் அதை மட்டும் முறியடிக்க முடியாது என்று சேவாக் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,921 ரன்களை குவித்துள்ளார். கோலி இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை மட்டுமே குவித்துள்ளார். 

விராட் கோலியால் டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரி சாதனையையும் முறியடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!