ஷிகர் தவான் - வில்லியம்சன் ஜோடி அபாரம்.. பிரிக்க முடியாத சென்னை அணிக்கு பிரேக் கொடுத்த பிராவோ

Asianet News Tamil  
Published : May 13, 2018, 05:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
ஷிகர் தவான் - வில்லியம்சன் ஜோடி அபாரம்.. பிரிக்க முடியாத சென்னை அணிக்கு பிரேக் கொடுத்த பிராவோ

சுருக்கம்

shikhar dhawan and williamson scored half century against csk

ஷிகர் தவான் வில்லியம்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் சென்னை அணி திணறியது. பெரும் போராட்டத்திற்கு பிறகு தவான் விக்கெட்டை வீழ்த்தி பிராவோ பிரேக் கொடுத்தார்.

சென்னை ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான 46வது லீக் போட்டி புனே மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

ஷிகர் தவானுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக ஆடி ரன்களை குவித்தது.  இருவரும் அரைசதம் கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 122 ரன்களை சேர்த்தது. ஷிகர் தவான் வில்லியம்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் சென்னை அணியின் பவுலர்கள் திணறினர்.

49 பந்துகளுக்கு 79 ரன்கள் எடுத்த நிலையில், பிராவோ வீசிய 16வது ஓவரின் கடைசி பந்தில் தவான் அவுட்டானார். இந்த விக்கெட் சென்னை அணிக்கு பிரேக்காக அமைந்தது. ஷர்துல் தாகூர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சனும் வெளியேறினார்.

17 ஓவரின் முடிவில் ஹைதராபாத் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்து ஆடிவருகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?