
பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ள மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.
இதுவரை மும்பை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் தலா 11 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றிகளை பதிவு செய்து 10 புள்ளிகளை பெற்றுள்ளன. மும்பை அணி ரன்ரேட் அதிகம் பெற்றுள்ளதால், புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 6ம் இடத்தில் உள்ளது.
மும்பை அணி தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு, தொடர்ச்சியாக 3ல் வெற்றிகளை பதிவுசெய்து, எதிரணிகளிடம் மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி தோல்விகளை மாறி மாறி பெற்றுவரும், ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர், தற்போது சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மோதுவதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாகவே அமையும்.
இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.