
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி புனே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள ஹைதராபாத் அணி, 9ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 11 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி 7 வெற்றிகளை பதிவுசெய்து 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.
சென்னை அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். பவுலிங்கில் சிறந்து விளங்கும் ஹைதராபாத் அணி, பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காமல் இருந்துவந்தது. ஆனால், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து, பேட்டிங்கிலும் சிறந்த அணி என்பதை நிரூபித்து காட்டியது.
சென்னை அணி பேட்டிங்கில் சிறந்து விளங்கினாலும் பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. சென்னை அணியின் சொதப்பல் பவுலிங் தொடர்பான அதிருப்தியை பலமுறை அந்த அணியின் கேப்டன் தோனி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஹைதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு சென்னை அணி முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.