தவான் கொஞ்சம் பொறுமையா ஆடியிருந்தா ? விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தானை பந்தாடிய பெருமை கிடைச்சிருக்கும் !! அங்கலாய்க்கும் ரசிகர்கள் !!

By Selvanayagam PFirst Published Sep 24, 2018, 11:53 AM IST
Highlights

இந்தியா- பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற சூப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் தவானும், ரோகித்தும் புகுந்து விளையாடி வந்தனர். இந்திய அணி வெற்றி பெற 28 ரன்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தவான் தேவையில்லாம்ல் ஓடி ரன் அவுட் ஆனார். அவர் சற்று பொறுமையுடன் ஆடியிருந்தால், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்ற பெருமை கிடைத்திருக்கும் என ரசிகர் அங்கலாய்த்தனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி எந்தவித பரபரப்பும் இன்றி அமைதியாக தொடங்கியது. ஆட்டத்தின் போக்கு  தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் கைகளுக்குள் வந்து சேர்ந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்து களத்தில் இறங்கியது. அந்த அணியின் சோயிப் மாலிக் 78 ரன்களும், சர்ஃபாஸ் அகமது 44 ரன்களூம், ஃபக்கார் ஜமாம் 31 ரன்களும் அடித்ததால் அந்த அணி ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்தது. இந்திய தரப்பில் பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன் பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 210 ரன்கள் அடிக்கும் வரை ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. ரோஹித் சர்மாவும், தவானும்  பாகிஸ்தான் வீரர்களின் பந்துகளை சரமாரியாக நாலாபுறமும் சிதறடித்தனர். மைதானத்தில் ஒவ்வொரு நொடியும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

வெற்றி இலக்கை எட்ட இன்னும் 28 ரன்களே இருந்த நிலையில், விக்கெட் விழுகாமலேயே இந்த ஜோடி ஆட்டத்தை முடித்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அணியின் எண்ணிக்கை 210 ஆக இருக்கும் போது தவான் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி 114 ரன்களில் வெளியேறினார்.

தவான் மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் தாக்ககுப் பிடித்து ஆடியிருந்தால், பாகிஸ்தானை இன்னும் படுதோல்வி அடையச் செய்திருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்தனர். விக்கெட் இழப்பின்றி இந்தியா வெற்றி என்ற பெருமையைப் பெற்றிருக்கலாம். ஆனாலும் என்ன தவான், ரோகித் ஜோடியின் வாண வேடிக்கை இந்திய ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்தது என்பதே உண்மை.

click me!