ஷென்ஸென் ஓபன் டென்னிஸ்: ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிக்கு முன்னேற்றம்...

 
Published : Jan 04, 2018, 11:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
ஷென்ஸென் ஓபன் டென்னிஸ்:  ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிக்கு முன்னேற்றம்...

சுருக்கம்

Shenzhen Open Tennis Romanias Simono Haleb progress in quarterfinals

ஷென்ஸென்  ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஷென்ஸென்  ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி சீனாவின் ஷென்ஹென் நகரில் நடைப்பெற்று வருகிறது.

இந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப், சீனாவின் டுவான் யிங்யிங்கை எதிர்கொண்டார். அதில், 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் டுவான் யிங்யிங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ருமேனியாவின் இரினா கேமிலியா பெகு மற்றும் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா மோதினர்.

இந்த ஆட்டத்தில் இரினா கேமிலியா பெகு 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வீழ்த்தினார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செக் குடியரசின் காட்டெரினா சினியாக்கோவாவு, சீனாவின் வாங் யஃபானவும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் காட்டெரினா சினியாக்கோவாவு 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வாங் யஃபானை வென்றார்

.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா