
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா - எப்சி கோவா அணிகள் மோதும் விறுவிறுப்பான 37-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா - எப்சி கோவா அணிகள் மோதும் விறுவிறுப்பான 37-வது லீக் ஆட்டம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு சாம்யினான கொல்கத்தா, இதுவரை 6 லீக் ஆட்டங்களில் விளையாடி அதில் 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியைப் பதிவு செய்து, 8 புள்ளிகளுடன் பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளது.
கோவா அணி 6 ஆட்டங்களில் விளையாடி, அதில் 4 வெற்றி, 2 தோல்விகளைப் பதிவு செய்து, 12 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணி, சொந்த மண்ணில் மும்பை சிட்டி, தில்லி டைனமோஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
சொந்த மண்ணில் இன்று நடைபெறும் ஆட்டத்திலும் கொல்கத்தா வெற்றியைப் பதிவு செய்யும் என்று உள்ளூர் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
எஃப்சி கோவா அணி, கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து மும்பை சிட்டி எஃப்சி அணியிடம் தோல்வியைத் தழுவிய கோவா, சொந்த மண்ணில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.
அதனையடுத்து, கடந்த மாதம் நடைபெற்ற கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்திலும், தில்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்திலும் கோவா வெற்றி பெற்றது.
டிசம்பர் 23-ஆம் தேதி சொந்த மண்ணில் நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் புணே சிட்டி எஃப்சி அணியிடம் கோல் எதுவும் பதிவு செய்யாமல் தோல்வியைச் சந்தித்து கோவா.
இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.