ஹர்திக் பாண்டியாவுக்கு தேர்வாளர்கள் கிடுக்குப்பிடி!!

Published : Nov 30, 2018, 03:44 PM IST
ஹர்திக் பாண்டியாவுக்கு தேர்வாளர்கள் கிடுக்குப்பிடி!!

சுருக்கம்

ஹர்திக் பாண்டியாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கும் விதமாக அவருக்கு தேர்வுக்குழு சார்பில் உடற்தகுதியை நிரூபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

ஹர்திக் பாண்டியாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கும் விதமாக அவருக்கு தேர்வுக்குழு சார்பில் உடற்தகுதியை நிரூபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய இந்திய அணியில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மட்டும்தான். அதனால் வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவாக இருக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஹர்திக் பாண்டியாவால் சோபிக்க முடியும். எனினும் அவர் காயத்திலிருந்து குணமடையாததால் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை. 

கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதிலிருந்து குணமடையாததால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்தார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. 

அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியா உடற்தகுதி பெற்றுவிட்டால் அணியில் சேர்க்கப்படுவார். இந்நிலையில், அவர் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற்றுவிட்டால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் சேர்க்கப்படுவார். எனவே நடந்துவரும் ரஞ்சி டிராபி தொடரில் ஆடி அவரது உடற்தகுதியை நிரூபிக்குமாறு தேர்வாளர்கள் ஹர்திக் பாண்டியாவை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

ரஞ்சி டிராபி போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆடிவிட்டால் டிசம்பர் 26ம் தேதி மெல்போர்னில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரை அணியில் சேர்க்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 1வது ODI: இந்திய அணி களமிறங்கும் புதிய மைதானம்.. இத்தனை கோடியில் உருவாக்கப்பட்டதா..?
ருத்ராஜ் மரண அடி.. ஜாம்பவான் சாதனையை ஓவர்டேக் செய்து மாஸ்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!